எனது அழகை பார்த்து வாக்களிக்க வேண்டாம்: ஹிருணிகா
sireku
உருவத்தின் அழகை பார்த்து தனக்கு வாக்களிக்க வேண்டாம் என மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
உருவத்தின் அழகை பார்த்து தனக்கு வாக்களிக்க வேண்டாம் என மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் பேசுகையில்,
சிலர் என்னை மேடம் என்றும் சிலர் மிஸ் என்றும் அழைக்கின்றனர். என்னை அப்படி அழைக்க வேண்டாம். நான் அதனை விரும்பவில்லை. நான் இன்னும் சின்னப் பெண் என்பதால் என்னை மகள் என்று கூப்பிடுங்கள். அது எனக்கு போதும்.
எனது தந்தை கொல்லப்படும் வரை அனைவரும் லக்கி அண்ணன் என்றே அழைத்தனர். அவரை வேறு பெயர் கூறி எவரும் அழைக்கவில்லை. என்னையும் அப்படியே அழையுங்கள்.
எனது தந்தை கொல்லப்பட்ட தினத்தில் நான் அவரது மடியில் அமர்ந்திருந்தேன். என்னை மடியில் இருந்து இறங்குமாறு தந்தை கூறினார். அப்போது நான் சுமையாகி விட்டேனா என்று தந்தையிடம் கேட்டேன்.
எனது நிழலான எனது தந்தையை என்னிடம் இருந்து பிரித்து விட்டனர். அவர்களுக்கு அண்மையில் ஒரு நாள் மக்கள் சிறந்த பதிலை வழங்கியிருந்தனர். எதிர்காலத்தில் அதனை விட சிறந்த பதிலை கொடுப்பார்கள்.
நான் அழகாக இருப்பதால் வாக்களிப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படி செய்ய வேண்டாம். அழகான திடகாத்திரமான உருவத்தை பார்த்து கடந்த காலத்தில் வாக்களித்து நடந்தவற்றை மறந்து விட வேண்டாம். எனது திறமையை பார்த்து வாக்களியுங்கள் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
 
 
0 Comments