sireku

கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக மாணவர். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனையடுத்து மாணவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 28ம் திகதி குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவான லஹிரு சந்தருவான் என்ற மாணவரே இவ்வாறு பரிதாபமாக தலைமைத்துவ பயிற்சியின் இடைநடுவில் உயிரிழந்துள்ளார்.