sireku


ஐக்கிய தேசியக் கட்சிக்கு இனிமேல் ஆதரவளிக்க போவதில்லை என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை நிறுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்ந்தும் தோல்வியை சந்தித்து வரும் கட்சிக்கு ஆதரவளிக்க எண்ணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டே அசாத் சாலி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...