sireku



நொக்கியா நிறுவனமானது இதுவரையில் சிம்பியின் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்தது.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nokia X எனும் இக்கைப்பேசி தொடர்பான தகவல்கள் சில மாதங்களுக்கு முன்னரே வெளியாகியிருந்த போதிலும் தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் மக்கள் மத்தியில் நொக்கியா கைப்பேசிகள் பலத்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...