sireku
கிலார்க்ஸ்பர்க்,
அமெரிக்காவில் 2 செல்போன் டவர்கள் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வெர்ஜினாவில் நேற்று 100 மீட்டர் உயரம் கொண்ட செல்போன் டவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் ஒப்பந்தகாரர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
 இதனை அடுத்து அதே பகுதியில் சிறிது நேரம் கழித்து சிறிய டவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த ஒருவர் பலியாகினார்.
 இந்த சம்பவங்களில் காயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...