சவுதிய அரேபியாவில் மதுபானம் விற்ற இந்தியர் 144 பாட்டில்களுடன் கைது
sireku
ரியாத்,
சவுதிய அரேபியாவின் ரியாத் நகரில் சாலையில் காரில் வைத்து வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை விற்ற இந்தியரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியரிடம் இருந்து 144 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலாஷ் பகுதியில் ஒருவர் காரில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக அந்நாட்டு போலீசாருக்கு தொலைபேசி மூலம் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகத்தின்பேரில் அங்கு நின்ற காரை சோதனை செய்தபோது இந்தியர் மது விற்றது அம்பலமானது. இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் எப்போது கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் தெரியவில்லை. அவர் மதுபானம் விற்ற காரும் திருடப்பட்டது என்று கூறப்படுகிறது.
வாடகைக்கு எடுத்த காருக்கு வாடகை செலுத்தாமல் இவ்வாறு மதுபானம் விற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுபானம் தயாரித்தது மற்றும் விற்றது, காரை திருடியது என்ற இரண்டு குற்றங்களை இந்தியர் எதிர்க்கொண்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்ற்னார். விசாரணையின் மதுபானம் தயாரித்த இடம் மற்றும் விற்பனை தொடர்பான தகவல்களை போலீசார் பெற்றுள்ளனர்.
சவுதிய அரேபியாவில் மதுபானம் குடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மதுபானம் குடித்தால் பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments