sireku




தாய்லாந்தின் டிராங்க் பகுதியில் உள்ள சாங் ஹாங் ஏரியில் தண்ணீருக்கு அடியில் 130 மீட்டர் ஆழத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமண ஜோடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


நீச்சல் பயிற்சியாளர்களான ஜப்பானைச் சேர்ந்த ஹிரோயுகி யோஸ்கிடாவும் அமெரிக்காவைச் சேர்ந்த சான்ட்ரா ஸ்மித்தும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். 

தங்கள் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்த தண்ணீரில் அதிகபட்ச ஆழத்தில் மூழ்கி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர்.

தாய்லாந்தின் டிராங்க் பகுதியில் உள்ள சாங் ஹாங் ஏரியை அதற்காக அவர்கள் தேர்வு செய்தனர். மணமகனும் மணமகளும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் உதவியுடன் கடந்த 6 மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.


 சில நாள்களுக்கு முன்பு சாங் ஹாங் ஏரிக்கு அடியில் 130 மீட்டர் ஆழத்தில் உள்ள சிறிய குகையில் அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது.

திருமணத்துக்கு மணமகள் பாரம்பரிய வெள்ளை கவுன் அணியவில்லை. மணமகன் கோட், சூட் அணியவில்லை. இருவரும் பிரத்யேக கருப்பு நிற நீச்சல் உடையை அணிந்து தண்ணீரில் குதித்தனர். எட்டு நிமிடத்தில் திருமண மேடை அமைக்கப்பட்டிருந்த குகையை அடைந்தனர்
.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...