sireku


சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுமார் 1¼ லட்சத்துக்கும் மேலானோர் பலியாகியும் இன்னும் போராட்டம் ஓய்ந்த பாடில்லை.

மக்களுக்கு ஆதரவாக புரட்சிபடையும், அரசுக்கு ஆதரவாக ராணுவமும் சண்டையிட்டு வருகின்றன. ஓயாத சண்டையால் மக்கள் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிரியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான அலெப்போவில் ராணுவம் தொடர்ந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் சரமாரியாக பேரல் குண்டுகளை வீசியது. அதில் 121 பேர் பலியாகினர். அவர்களில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.

 மேலும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அல் நுஸ்ரா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
நேற்றும் அலெப்போ நகரில் தொடர்ந்து குண்டுகளும், 'ஸ்கட்' ஏவுகணைகளும் வீசப்பட்டன. அதில் ஏராளமானோர் பலியாகி இருக்கலாம் என மனித உரிமை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.