sireku


 மூன்று ஆண்டுகளாக தொடரும் சிரியா மக்கள்எழுச்சிப்போராட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற மேற்கத்தியநாடுகள் முடிவுச் செய்துள்ளன.எதிர்ப்பு போராளிகள் மத்தியில்அல்காயிதாவின் இருப்பு வலுவடைவதாக கூறி பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்தியநாடுகள் பஸருல் அஸத் அரசுக்கு உதவ முன்வந்துள்ளன.

அஸத் ஆட்சியில் இருந்துவிலகி எதிர்கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால் அல்காயிதா போன்ற இஸ்லாமியஇயக்கங்களுக்கு அரசு மீதான செல்வாக்கு அச்சுறுத்தலாக மாறும் எனமேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.எதிர்ப்பு போராளிகளை எதிர்கொள்ள உதவி அளிக்கும் வாக்குறுதியுடன் சிலமேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை ஏஜன்சிகளின் அதிகாரிகள் அஸதைசந்தித்ததாக சிரியா வெளியுறவு இணை அமைச்சர் ஃபைஸல் மெஹ்தாத்பி.பி.சியிடம் தெரிவித்தார்.அஸத் ஆட்சியில் இருந்து விலகுவது தொடர்பாகமேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகளும், அரசியல் தலைவர்களுக்குமிடையேகருத்துவேறுபாடு எழுந்துள்ளது.

எதிர்ப்பாளர்களில் ஜிஹாத் இயக்கங்களின்செல்வாக்கை சர்வதேச சமூகம் கவலையோடு காண்பதாக அவர் தெரிவித்தார்.போராளிகளை எதிர்கொள்ள பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின்அதிகாரிகள் டமாஸ்கஸிற்கு வருகை தந்ததாக கூறிய மெஹ்தாத், பிற நாடுகளின்பெயர்களை வெளியிடவில்லை.சிரியாவின் அறிக்கையை குறித்து பிரிட்டன் பதிலளிக்கவில்லை.

உளவுத்துறைசம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பதில் அளிக்கமுடியாது என்று பிரிட்டன்வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.ஆனால், பெயர் வெளியிட விரும்பாதபிரிட்டன் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் சிலர் சிரியா அரசுடன் பிரிட்டன்அதிகாரிகள் நடத்திய சந்திப்பை உறுதிச் செய்துள்ளதாக பி.பி.சி. தெரிவிக்கிறது.இதனிடையே மேற்கத்திய நாடுகள் அஸத் அரசுக்கு உதவ வாக்குறுதி அளித்துள்ளதாகவெளியான செய்தி தங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாக சிரியாவின்எதிர்கட்சி செய்தி தொடர்பாளர் காலித் ஸலாஹ் கூறியுள்ளார். 

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...