கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும் - விக்ரமபாகு
sireku
கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். பௌத்த கடும்போக்குடைய சில அமைப்புக்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டு;த் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிஹல ராவய போன்ற அமைப்புக்களுக்கு அரசாங்கமே ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு காணப்படும் அரசியல் செல்வாக்கு காரணமாக காவல்துறையினர் குறித்த அமைப்புக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மூடிமறைக்க முயற்சித்து வருவதாக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

0 Comments