sireku

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க உதவிய மருத்துவருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சீல் படையினர், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் சுட்டுக் கொன்றனர்.

இதன்பின் பாகிஸ்தான் நடத்திய விசாரணையில், ஒசாமாவை காட்டிக் கொடுத்தது மருத்துவர் ஷகீல் அப்ரிடி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-இஸ்லாம் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி அப்ரிடி கைது செய்யப்பட்டார்.

இவரை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறுகையில், அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க அப்ரிடி விடுவிக்கப்பட சாத்தியமே இல்லை. அவரது குற்றத்தை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அவரது மேல் முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தால் பாகிஸ்தானுக்கு வழங்க இருந்த 33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...