sireku

மனதை பதறவைக்கும் படம்! விமானத் தாக்குதலில் இருந்து பச்சிளம் குழந்தை மீட்பு
சிரியா ஜனாதிபதி இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தொடங்கிய நாளில், விமான தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போர் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி அரசப் படையினர் நடத்திய இரசாயன தாக்குதலில், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
இதனையடுத்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் சிரியா மீது தாக்குதல் நடத்த தயாராகின.
இதற்கிடையே ரஷ்யாவின் தலையீட்டால், சிரியா இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க தயாரானது.
மேலும் ஐ.நாவும் அனைத்து இரசாயன குண்டுகள் மற்றும் இரசாயன ஆயுதங்களையும் ஒப்படைக்க ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் இக்குண்டுகள் அனைத்தும் டேனிஸ் என்ற கப்பலின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அதேநாளில் சிரியாவில் விமான தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலின் போது வெளியான புகைப்படம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதில் சிறு ஆண்குழந்தை ஒன்று கம்பளத்தில் சுற்றப்பட்டு மீட்பு பணியாளர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது.
இதில் குழந்தைகளின் முகங்கள் முழுவதும் புழுதியால் சூழப்பட்டிருந்தது, மேலும் மற்ற குழந்தைகளையும், சிறுவர்களையும் காப்பாற்றியுள்ளனர்.
இந்த வருடத்திற்குள் தனது எல்லா வித இரசாயன ஆயுதங்களையும், இரசாயன குண்டுகளையும் ஒப்படைக்க வேண்டும் என ஐ.நா சிரியாவை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.