sireku
முள்ளிப்பொத்தானை தி/அல்/ஹிஜ்ரா மகா வித்தியாலத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்  நிகழ்வு தி/அல்/ஹிஜ்ரா மகா வித்தியாலத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலையில் இடம் பெற்றது.



அரசாங்கப் பாடசாலைகளிள் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.இதன் ஒரு பகுதியாக 
கிண்ணியா கல்வி வலயத்திற்குற்பட்ட தி/அல்/ஹிஜ்ரா மகா வித்தியாலத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்  நிகழ்வு தி/அல்/ஹிஜ்ரா மகா வித்தியாலத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலையில் இடம் பெற்றது.

ஆரம்ப பிரிவு பாடசாலையின் அதிபர் ப.அப்துல் ரவூப் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுகளிள் பிரதம அதிதியாக முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்வி அதிகாரி A.R.M. சுபைர் ,கிண்ணியா சோனல் M.M.இவாதுள்ளா, தப்பலாகமம் பிரதேச சபை உறுப்பினர் A.W ரம்சான்,  தி/அல்-ஹிஜ்ரா மகாவித்தியாலயத்தின் அதிபர் A.மஹ்ரூப், மற்றும் எஸ்.எம் அனீபா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.