sireku


ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெறுமதியான முடியை பிடித்து கொண்டிருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.



மாத்தறை வெலிகம நகரில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


பிரபாகரனின் ஒரு முடிக்கும், ஜனாதிபதியை ஒப்பிட முடியாது என பொன்சேகா கூறுகிறார். மிகவும் பெறுமதியான பிரபாகரனின் முடி ஒன்று பொன்சேகாவுக்கு கிடைத்துள்ளது. எப்படி இந்த முடியை பிடுங்கினார் என்பதுதான் எனக்கு சந்தேகம். இப்படியானவர்களே நாட்டில் உள்ளனர்.


இவர்களால் நாட்டுக்கு சேவை கிடைத்துள்ளது. எனினும் பொறாமை, பொய், குரோதம் போன்றவை இந்த நாட்டை அழித்தன. பொன்சேகா மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தைப் பற்றியும் கூறுகிறார். இதனால் அவருக்கு கோபமும் குரோதமும் பெறுமதியானது. எனவே இதனை நாம் வெறுமனே இதனை விட்டு விட முடியாது.


முக்கியமாக தென் பகுதியை சேர்ந்தவர்களே நாட்டை பாதுகாக்க எப்போதும் முன்வந்தவர்கள். இதனால் நாட்டை பாதுகாக்கும் சக்திகளாக நாம் மாறவேண்டும் என்றார்.