sireku

தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது.

போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்து கோருவதன் மூலம் நாடு இன்னும் நெருக்கடிகளையே எதிர்நோக்க நேரிடும். புலிகள் அமைப்பு எவரையம் பாவம் பார்க்கவில்லை.

அவ்வாறு என்றால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும்.

இம்முறை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டில் பங்கேற்க முயற்சித்து வருவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...