sireku

பௌத்த பிக்குகளை நாட்டுக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பௌத்த பிக்குகளை நாட்டுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தின் ஊடாக இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பிரிவெனாக்களுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினர் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக பிரச்சாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகளின் உரைகள், போராட்டங்கள், பேரணிகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை இலங்கை எதிர் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சி;க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.