டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சி - கூகுள் நிறுவனம் தயாரிக்கிறது
sireku
டிரைவர் இல்லாமல் ஓடும் அதிவேக ரோபோ டாக்சியை 'கூகுள்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
இணையதள தேடு இயந்திரம் (ஸ்ர்ச் என்ஜின்) மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவானாக 'கூகுள்' நிறுவனம் திகழ்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் உருவாக்கியது.
இருப்பினும், கார் உற்பத்தி தொழில் நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.
எனவே, தாமாகவே கார் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி நவீனரக கார்களை தயாரிக்க கூகுள் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் 'ரோபோட்டிக் டாக்சி'களை உருவாக்க திட்டமிட்டது.

அந்த புதிய தொழில்நுட்பத்தை 'பொடோட்டா பிரையஸ்' மற்றும் 'எலக்சல் ஆர்எக்ஸ்' கார்களில் பொருத்தி சோதனை மேற்கொண்டது. இந்த தொழில்நுட்பத்துடன் ரோபோட்கள் மூலம் செயல்படும் தானியங்கி கார்களை தயாரிக்க கூகுள் முடிவு செய்தது. இதற்காக உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்துகொள்ள முயற்சிகளை மேற்கொண்டது.
இருப்பினும், கார் உற்பத்தி தொழில் நுட்பங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.
எனவே, தாமாகவே கார் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி நவீனரக கார்களை தயாரிக்க கூகுள் முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல்கட்டமாக டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் 'ரோபோட்டிக் டாக்சி'களை உருவாக்க திட்டமிட்டது.
இவை டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை. அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் வழங்குகிறது.
தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி, படுவேகமாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிந்து இந்த ஆண்டின் அரைஇறுதிக்குள் லண்டன் சாலைகளில் சோதனை ஒட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என கூகுள் நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments