sireku

 முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அமைப்புகளின் வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் 
உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு சர்வதேச வை.எம்.எம்.ஏ அமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர்.
 
கொழும்பு 7இல் உள்ள ரோஸ்மிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹ_சைன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்ப­ட்டன.
 
இக் கூட்டத்திற்கு சட்டத்தரணி கௌசுல் அமீன் மற்றும் வைத்தியர் யூசுப் அஸ்ரப் அசீஸ், என்.எம்.அமீன், மௌலவி இஜ்லான் போன்ற 30இற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
 
1. 2012ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் தொடுக்கப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடல்
 
2. ஏனைய மத அமைப்புக்களோடு குறிப்பாக கிறிஸ்த்துவ, கத்தோலிக்க ஹிந்து மத அமைப்புகளோடு பௌத்த தீவிரவாத இயக்கங்கள் சிறுபான்மையினருக்கு தொடுக்கும் மத கலாசார ரீதியிலான தாக்குதல் பற்றி கலந்துரையாடுவது.
 
3. அரசியல்வாதிகள் அல்லாத இந்த நாட்டின் சட்டத்தரணிகள், வைத்தியர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போன்ற முஸ்லிம் புத்திஜீவிகள் கொண்ட அதிஉயர் மட்டத்தில் தூதுக் குழுவொன்று இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து இந்நாட்டு முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளக்குதல்.
 
4. முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்படும் மார்க்கம் கலாச்சார ரீதியாக தொடுக்கப்பட்டுள்ள சம்பவங்களை ஆவணப்படுத்தி மூன்று மொழிகளிலும் ஒரு நூலொன்றை வெளியிடுதல்.
 
5. சட்டம், ஒழுங்கினை இலங்கையில் நிலை நாட்டுதல் முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்படும் பிரச்சினை­களுக்கு சட்ட ரீதியிலான தீர்வுகளைப் பெற்றுக்கொ­டுத்தல் போன்ற 5 விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.