sireku

இலங்­கைக்குள் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தா­னது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். 'எதனோல்" எனும் போதைப் பொருளை நான் கண்­டது கூடக் கிடை­யாது. எப்­ப­டி­யி­ருப்­பினும், தவ­றி­ழைத்­தவர் பிர­த­ம­ரா­கவே இருந்­தாலும் தூக்கில் இடப்­பட வேண்டும் என்று பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற இறக்­கு­மதி கள், ஏற்­று­ம­திகள் கட்­டுப்­பாட்டுச் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­வி­திகள் மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.


பிர­தமர் இங்கு மேலும் கூறு­கையில்,


இலங்­கைக்குள் 'எதனோல்" உள்­ளிட்ட போதைப்­பொருள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தா­னது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். இவற்றை நான் இது­வ­ரை­யிலும் பார்த்­த­தில்லை. அதனால், அதனைப் பார்ப்­ப­தற்கு ஆசை­யாக இருக்­கின்­றது.

எனது செய­லா­ள­ரினால் வழங்­கப்­பட்ட கடி­தத்தை வைத்து பிர­தமர் போதைப்­பொருள் கடத்­து­கிறார் எனக் கூறி இங்கு அர­சியல் செய்­கின்­றனர். இவ்­வி­ட­யத்தில் நான் அலட்டிக் கொள்­ளப்­போ­வ­தில்லை. கத்­தியால் குத்­தி­னாலும் கூட நான் மனம் தளர்ந்­து­விட மாட்டேன். நான் தவ­றி­ழைத்­தி­ருந்தால் அதனைத் தெரி­விப்­ப­தற்குத் தயா­ராக இருக்­கிறேன்.

நல்­ல­வ­ழி­யி­லேயோ கெட்­ட­வ­ழி­யிலோ நான் பணம் சம்­பா­தித்­தது கிடை­யாது. நான் சம்­பா­திக்கும் தேவையும் இல்லை. எனது தோட்­டத்தில் கோப்பி, மிளகு போன்ற பயிர்­களை கள­வாடிச் செல்­கின்­றனர். எனினும், அது­பற்றி நான் கேட்­பது கிடை­யாது.

போ­தைப்­பொருள் விட­யத்தில் சிங்­கப்­பூரைப் போன்று குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். நாட்டின் பிரதமரே குற்றமிழைத்திருந்தாலும் தூக்கில் இடப்பட வேண்டும். இவ்வாறான தண்டனைகள் இல்லா விட்டால் நாடு நாசமாகி விடும் என்றார்.