முஸ்லிம் சராணகதி அரசியலை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி..” …
sireku
முஸ்லிம் சராணகதி அரசியலை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி..” …
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப் பட்டுள்ளன, மார்ச் மாதம் கொழும்பு,கம்பஹா,களுத்துறை,காலி மாத்தறை,ஹம்பந்தொட்டை ஆகிய மாவட்டங்களுக்கான தேர்தல் இடம்பெறப் போகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குவாத கும்பலை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர முடியாத நிலையில் உள்ள அரசில் முஸ்லிம்கள் பெரும் அதிருப்தி கொண்டுள்ளதால் வழமைபோல் தனித்துக் கேட்டு மீண்டும் அரசில் கூட்டுச் சேர முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதால் இம்முறை ஆளும் கூட்டணயில் உள்ள மற்றொரு முஸ்லிம் அணியையும் தனியாக களமிறக்குவதன் மூலம் முஸ்லிம்களது வாக்குகளை சிதறடித்து அரசியல் பிரதிநிதித்துவங்களை இல்லாதொழிக்க முஸ்தீபுகள் நடைபெறுவதாக தெரிகிறது.
தலைநகரில் பெரும் சூதாட்டமாக மாறியுள்ள முஸ்லிம் அரசியலை மாத்திரமல்லாது ஏனைய பிரதேசங்களிலும் நல்லாட்சிக்கான விழுமியங்களை அறிமுகப் படுத்தும் புதியதொரு அரசியல் பயணத்திற்கான களமாக மேற்படி மாகாண சபைத் தேர்தலை பயன்படுத்த முடியுமா ??? என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
எல்லாமட்டங்களிலும் சூதாட்டமாகவே மாறியுள்ள அரசியலும், அரசியல் தரகர்களும் முகவர்களும், அடியார்களும் தொண்டர்களும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட பொதுவான ஒரு அணி களம் இறங்குவதை சீரணிக்க மாட்டார்கள் என்பதும் கசப்பான உண்மையாகும்.
எது எப்படிப் போனாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு “உதவி இல்லாவிட்டாலும் உபத்திரபமாவது செய்யாதிருத்தல்” என்ற நிலைப்பாட்டை சராணாகதி முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுப்பதாயின் குறைந்தபட்சம் எல்லோரும் பொதுவான ஒரே அணியில் களத்தில் இறங்க முடிவு செய்தல் அவர்கள் சமூகத்திற்கு செய்யும் பெரும் சேவையாக இருக்கும்.
இன்று முஸ்லிம் சராணகதி அரசியலை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி..” என்ற அளவிலாவது தக்கவைத்துக் கொள்வதும் சிரமமானதாகவே தெரிகிறது.
உலகெங்கும் இடம்பெறும் அநீதிகள் கண்டு உணர்வுகள் பொங்கியெழும் இளம் தலை முறையினரே எங்கள் சொந்த மண்ணில் ஒரு அழகிய போராட்டம் எங்களை அழைக்கின்றது…
அந்த அழகிய போராட்ட உணர்வுகளை எரிபோருளாக்கி கொளுத்திவிடுவோம் சத்தியத் தீ அது தேசத்திற்காக கொழுந்து விட்டு எரியட்டும்..!
0 Comments