sireku

பிக்குகள் தலைமையிலான குழு கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

பௌத்த பிக்குகள் உட்பட 50 பேர் கொண்ட குழுவினர் மீரிகம பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
திவுல்தெனிய நாவுல்ல பிரதேசத்தில் உள்ள இந்த தேவாலயத்தின் மீது கடந்த 8 ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பௌத்த பிக்கு ஒருவர் வழிநடத்திய குழுவே இந்த தாக்குதலை நடத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மைய காலமாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலங்கள் சிங்கள அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்குஉள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி:lankasri

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...