முள்ளிப்பொத்தானைக் கோட்டக் கல்விக்குற்பட்ட பாடசாலையான அல்-ஹிஜ்ரா மஹா வித்தியாலயத்தின் அதிபராக எ.மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
sireku
முள்ளிப்பொத்தானைக் கோட்டக் கல்விக்குற்பட்ட பாடசாலையான அல்-ஹிஜ்ரா மஹா வித்தியாலயத்தின் அதிபராக எ.மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானைக் கோட்டக் கல்விக்குற்பட்ட பாடசாலையான அல்-ஹிஜ்ரா மஹா வித்தியாலயத்தின் அதிபராக எ.மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013-12-04ந் திகதி நடந்த நேர்முகப் பரீட்சையில் இப்பதவிக்காக விண்ணப்பித்திருந்த திஃபாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் பிரதி அதிபரான வ.எகியா என்பவரை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றமைக்கமைவாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2014-01-03ந் திகதி இடம்பெற்ற புதிய அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எம்.சுபியான் உரையாற்றுகையில் 'தம்பலகாமம் பிரதேசத்தின் இப்பிரதான பாடசாலைக்கு தரமான அதிபர் நியமிக்கப்பட்டமையினையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் இப்பாடசாலையின் சகலவிதமான அபிவிருத்திக்கும் தனது அர்ப்பணிப்புடனான பங்களிப்பினை என்றும் வழங்குவதாகவும் தெரிவித்தார்'
இந்நகிழ்வில் தம்பலகாமம் பிரதேச சபையின் செயலாளர் ஆர்.கலீபுள்ளா, குறிப்பிட்ட பாடசாலையின் முன்னால் அதிபர் கே.எம்.சுபைர், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொற்றோர்களென பலர் கலந்து கொண்டனர்
0 Comments