sireku
தரை முதல் மேற் கூரை வரை வீட்டில் பெட்டி பெட்டியாக மலைப் பாம்புகளை அடைத்து வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சாண்டா அனா நகரில் வசிப்பவர் வில்லியம் புச்மான்(வயது 53), அங்குள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவரது வீட்டில் இருந்து கடந்த சில நாட்களாக தாங்க முடியாத துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் பொலிசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து பொலிசார் வில்லியம் வீட்டில் சோதனை நடத்தியதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, வீட்டின் தரை முதல் மேற்கூரை வரை பெட்டி பெட்டியாக மலைப்பாம்புகளை அடுக்கி வைத்திருந்தார்.
அவற்றில் பல பாம்புகள் இறந்து அழுகிய நிலையிலும், எலும்பு கூடாகவும் இருந்தன.
அத்துடன் அங்கும், இங்குமாக ஏராளமான கூண்டுகளில் எலிகளும் இருந்தன.
இதனை தொடர்ந்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வில்லியம் புச்மானை கைது செய்தனர்.
|
0 Comments