sireku

எகிப்தின் சர்வாதிகாரியான முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவியிறக்க நடந்த புரட்சியின் 3-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியா நகரங்களில் ராணுவ ஆதரவு அரசுக்கு எதிராகவும், ஆதரித்தும் பேரணிகள் நடைபெற்றன. இந்த பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது.

இதில் வெடிகுண்டுகளை வீசி எதிர்ப்பு பேரணியினர் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கெய்ரோ மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்த மோதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேரும், பிற பகுதிகளில் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 168 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக போராட்டக்காரர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பேரணிக்காக நேற்று அங்கு மக்கள் கூடியபோதும் கலவரம் ஏற்பட்டு 18 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...