sireku
போஸ்டன் டைனமிக்ஸ் ரோபோட் நிறுவனத்தை வாங்கியது கூகுள்
கூகுள் நிறுவனம் ரோபோட் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக முன்பு அறிவித்திருந்தது. இதற்காக ஏற்கனவே ஏழு ரோபாட் தொழில்நுட்ப நிறுவனங்களை விலைக்கு வாங்கிய கூகுள் நிறுவனம் தற்போது Boston Dynamics என்னும் பிரபல ரோபோட் தயாரிப்பு நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது.
போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே நடக்கக்கூடிய ரோபட், ஓடக்கூடிய ரோபட் என்று பல ரோபோட்களை உருவாக்கியுள்ளது. மேலும் போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமான பென்டகனுக்காக ஆராய்ச்சி ரோபோக்களை உருவாக்கி தந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நுட்பம்
0 Comments