sireku

(மாஷா அல்லாஹ்)தி /அல் /ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி  க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில்  மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் நான்காம் இடத்தினையும் பெற்று சாதனை.

கிண்ணியா கல்வி வலயத்திற்குற்பட்ட தி /அல் /ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ஜபருல்லாஹ் சம்சுன் பஸ்மினா க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் தோற்றி மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் நான்காம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.


முள்ளிப் பொத்தானையைச் சேர்ந்த ஜபருள்லலாஹ் சம்சுன் பஸ்மினா தனது ஆரம்பக் கல்வியினை தி/ பாத்திமா  வித்தியாலயத்தில் கற்றார் பிறகு உயர்தரத்தினை அல் /ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தில் பயின்று வருகின்றபோது தவிர்க்க முடியாத காரணத்தினால் திருமணம் செய்துகொண்டார் எனினும் அவரின் கல்வி நடவடிக்கைக்கு அவரின் திருமணம் ஒரு தடையாக அமையவில்லை.


கடந்த உயர்தரப் பரீட்சையில் 1110160 என்ற சுட்டிலக்கத்தில் கலைப் பிரிவில் வெளிவாரிப் பரீட்சாத்தியாக தோற்றி திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியாக நான்காம் இடத்தினையும் பெற்றுள்ள ஜபருல்லாஹ் சம்சுன் பஸ்மினாவுக்கு ஒரு குழந்தை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...