முள்ளிப்பொத்தானையில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி.

முள்ளிப்பொத்தானையில் இன்று 4–வது நாளாக மழை பெய்து வருகிறது,விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்,அதிகமானவர்கள் திடல் நிலங்களிள் நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்,

இன்று விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி லேசான தூறலுடன் மழை பெய்து வருகிறது.இந்த மழை மிகவும் பயனுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் இந்த மழையால் முள்ளிப்பொத்தானையில் உள்ள பரவிபாஞ்சான் குளம்,ஈச்சம் குளம் மற்றும் குட்டைகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன.

இந்த மழையால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை செல்லும் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.