sireku

மூளையால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை கரத்தை பொருத்திய முதலாவது பிரித்தானியர்

மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்திக் கொண்ட முதலாவது பிரித்தானியர் என்ற பெயரை ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் போது தாக்குதலுக்கு இலக்காகி கையொன்றை இழந்த அந்நாட்டு படைவீரர் பெறுகின்றார்.
தென் ரைனிசைட்டைச் சேர்ந்த அன்ட்றூகார்த்வெயிட் என்ற மேற்படி நபர் ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் பணியாற்றிய வேளை தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கையொன்றை இழந்தார்.
இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்படி மனதால் செயற்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்தியுள்ளனர்.
மேற்படி அறுவைச்சிகிச்சைக்கு 7 மணித்தியால நேரம் செலவிடப்பட்டுள்ளது.
அன்ட்றூ தனது செயற்கை கரத்தை எவ்வாறு அசைப்பது என நினைக்கும் போது அவரது மூளையிலிருந்தான இலத்திரனியல் அதிர்வுகள் நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன மின்வாயர்களை சென்றடையும் அங்கிருந்து அவை செயற்கை கரத்தில் பொருத்தப்பட்ட நுண் கணனிகளுக்கு செய்திகளை அனுப்ப அதற்கேற்ப கையில் அசைவுகள் ஏற்படுத்தப்படும்.
தற்போது அன்ட்றூவால் தனது கரத்தை திறக்கவும், மூடவும், விரல்களை மடிக்கவும் விரிக்கவும் மணிக்கட்டை சுழற்றவும் முடிகிறது.
இந்த அறுவைச் சிகிச்சைக்காக 60 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.