பேஸ்புக்கில் டேக் செய்ய போறீங்களா?
பேஸ்புக்கில் டேக் செய்ய போறீங்களா?
பேஸ்புக்கில் உள்ள Photo Tag வசதி பற்றி அறிந்திருப்பீர்கள். நம் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த அல்லது நண்பர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிரும்போது அந்த போட்டோவில் உள்ள நண்பர்களை குறிப்பதற்கு இது பயன்படுகிறது. ஆனால் அதிகமானவர்கள் தொடர்பில்லாத பொதுவான புகைப்படங்களில் நண்பர்களை டேக் செய்கிறார்கள். இதனால் அந்த நண்பர்களுக்கு பிரச்சனை வரும் என்று உங்களுக்கு தெரியுமா?
பேஸ்புக் பயனர்களுக்கு சில சமயம் பல்வேறு காரணங்களால் கணக்கு முடக்கப்படும். அதை சரி செய்து மீண்டும் பேஸ்புக் பயன்படுத்த அவர்களுக்கு (அநேகமாக) நான்கு வழிகள் தான் உள்ளது.
1. எஸ்எம்எஸ் மூலம் Verification Code பெறுதல் - ஆனால் இதற்கு நீங்கள் பேஸ்புக் கணக்கில் உங்கள் மொபைல் எண்ணை சேர்த்திருக்க வேண்டும்.
2. புகைப்படங்களில் உள்ள உங்கள் நண்பர்களை சரியாக சொல்லுதல் - இதைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்
3. சமீபத்தில் நீங்கள் எந்த கணிணியில் இருந்து பேஸ்புக் பயன்படுத்துனீர்களோ? அதிலிருந்து உள்நுழைய வேண்டும்.
4. இந்த மூன்றும் முடியாத பட்சத்தில் இறுதியாக இருக்கும் ஒரே வழி, நமது அரசாங்க அடையாள அட்டை நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுவாக பேஸ்புக் பயன்படுத்தும் அதிகமானவர்கள் தங்கள் மொபைல் எண்ணை கொடுத்திருக்க மாட்டார்கள். அதனால் மொபைல் என்னை கொடுத்திருந்தால் மட்டுமே முதல் வழி மூலம் கணக்கை திரும்ப பெறமுடியும்.
அதிகமானவர்கள் தங்கள் அடையாள அட்டை நகலை கொடுப்பதற்கு விரும்ப மாட்டார்கள்.
மூன்றாவது வழி எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. இதை பயன்படுத்தியவர்கள் சொல்லவும்.
இதனால் கணக்கை திரும்ப பெறுவதற்கு நம்மிடம் முக்கியமான வழி புகைப்படங்களில் உள்ள நண்பர்களை சரியாக சொல்லுதல்.
புகைப்படங்களில் உள்ள நண்பர்கள் யார் என்று ஐந்து முறை கேட்கும். ஒவ்வொரு முறையும் ஒரு நண்பரின் மூன்று புகைப்படங்களைக் காட்டும். இந்த ஐந்து தடவையில் குறைந்தபட்சம் மூன்று முறை சரியாக சொன்னால் மட்டுமே உங்கள் கணக்கை திரும்ப பெற முடியும்.
மேலே உள்ளது மாதிரி புகைப்படம். அதில் முதல் புகைப்படம் மூலம் நண்பர் யார் என்று சொல்லிவிடலாம். மற்ற இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள்.
நண்பர் இல்லாத பொதுவான புகைப்படங்களில் நண்பர்களை டேக் செய்யும் புகைப்படங்கள் இவைகள்.
இவற்றின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா? முடியாது தானே? அப்படியென்றால்உங்கள் நண்பர்கள் இல்லாத பொது புகைப்படங்களில் உங்கள் நண்பர்களை டேக் செய்யாதீர்கள்!
"அதெல்லாம் நான் கேட்கமாட்டேன். டேக் செய்தே தீருவேன்" என்று அடம்பிடிக்கிறீர்களா? அப்படியென்றால் அதற்கு வேறொரு வழி இருக்கிறது.
Status Bar-ன் கீழே முதல் ஐகானை க்ளிக் செய்து, Who were you with? என்ற இடத்தில் உங்கள் நண்பர்களை டேக் செய்துக் கொள்ளலாம்.
இதனால் Tag-ம் செய்துவிடலாம், நண்பர்களுக்கும் பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

0 Comments