பிளேஸ்டேசன் 4 வில் குறைபாடுகள்: கொள்வனவாளர்கள் அதிருப்தி



சொனி நிறுவனத்தின் கேமிங் உபகரணமான பிளேஸ்டேசன் 4 வெளியாகி முதல் 24 மணித்தியாலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.

வட அமெரிக்காவின் இதன் விற்பனை அமோமாக உள்ளதாக சொனி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிளேஸ்டேசன் 4 வில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பாவனையாளர்கள் முறையிடத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று வெளியாகிய பிளேஸ்டேசனை கொள்வனவு செய்ய அமெரிக்கா மற்றும் கனடாவில் பலர் நீண்ட வரிசைகளில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து கொள்வனவு செய்துள்ளனர்.

எனினும் கொள்வனவு செய்த சிலர் தமது சாதனங்கள் ஒழுங்கா இயங்கவில்லை என இணையத்தின் ஊடாக முறையிடத்தொடங்கியுள்ளனர்.

சாதனம் இடை நடுவே நின்று விடுவதாகவும், வேறு சில குறைபாடுகள் தொடர்பாகவும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 எனினும் இதற்கு சொனி மறுப்பு தெரிவித்துள்ளதுடன் சில சாதனங்களே ஒழுங்காக செயற்படவில்லையென சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக ஒரு சாதனம் வெளியாகும் போது இத்தகைய பிரச்சினைகள் வருவது வழமை என சொனி தெரிவித்துள்ளது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...