23வது CHOGM இலங்கையின் கொழும்பு மாநகரில் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நவம்பர் 15 -17ம் திகதி வரை நடைபெறுகின்றது. அந்தவகையில், பொதுநலவாய அமைப்பு மற்றும் CHOGM தொடர்பிலான சுவையான தகவல்கள் உங்களுக்காக
23வது CHOGM இலங்கையின் கொழும்பு மாநகரில் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நவம்பர் 15 -17ம் திகதி வரை நடைபெறுகின்றது . அந்தவகையில், பொதுநலவாய அமைப்பு மற்றும் CHOGM தொடர்பிலான சுவையான தகவல்கள் உங்களுக்காக…!
Y பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள், பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன. உலக சனத்தொகையில் 30% ஆனோர் பொதுநலவாய அமைப்பு நாடுகளில் வசிக்கின்றனர்.
Y பொதுநலவாய அமைப்பு 1931ம் ஆண்டு "பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள்" என்கின்ற நாமத்தில் உருவாக்கப்பட்டு 1946ம் ஆண்டு "பொதுநலவாய நாடுகள்" என பெயர் மாற்றம் பெற்றது.
Y பொதுநலவாய அமைப்பில் 54 நாடுகள் அங்கத்துவம் பெறுகின்றன. அரசியல் குழப்பநிலையின் காரணமாக பிஜி நாடு 2009ம் ஆண்டு பொதுநலவாய அமைப்பிலிருந்து இடை நிறுத்தப்பட்டது.
Y மார்ச் மாதத்து 2வது திங்கட்கிழமையன்று பொதுநலவாய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
Y பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் முதன்முதலில் கலந்துகொண்ட CHOGM 1973ம் ஆண்டு கனடா, ஒட்டாவாவில் நடைபெற்றது. இதற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து CHOGMகளிலும் மகாராணி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் தற்சமயம் இலங்கையில் நடைபெறுகின்ற 23வது CHOGM இல் மகாராணியின் சார்பாக, பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் அவர்களே பங்கேற்கின்றார்.
Yபொதுவாக 02 ஆண்டுகளுக்கொரு தடவை பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களது கூட்டம் (CHOGM) நடைபெறுகின்றது.
தற்சமயம் நவம்பர் 15-17ம் திகதி வரை இலங்கையில் நடைபெறுவது 23வது CHOGM ஆகும்.
Y 24 வது CHOGM 2015ம் ஆண்டு மொறீசியஸ் நாட்டில் நடைபெறவுள்ளது.
Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய நாடு கனடா, இதன் நிலப்பரப்பு 10 மில்லியன் சதுரகிலோமீற்றர்கள் ஆகும்.
Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சனத்தொகை கூடிய நாடு இந்தியா, சனத்தொகை 1.1 பில்லியன் ஆகும்.
Y பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் மிகச்சிறிய நாடு நவ்ரு, சனத்தொகை 13,000 ஆகும்.
Y பொதுநலவாய அமைப்பிலிருந்து எந்த நேரத்திலும் தனது உறுப்புரிமையை விலக்கிக் கொள்ளும் உரிமை அங்கத்துவ நாடுகளுக்கு உண்டு. 1949ம் ஆண்டு அயர்லாந்து குடியரசும், 2003ம் ஆண்டு சிம்பாப்வேயும் தமது உறுப்புரிமையை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Y பொதுநலவாய அமைப்பில் நவ்ரு தேசம் விசேட உறுப்புரிமை வகிக்கின்றது. இது CHOGM இல் கலந்துகொள்வதில்லை.
நன்றி kklogan.blogspot.com
0 Comments