நடுவானில் விமானியின் உடல்நிலை மோசம் - விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பயணி



இங்கிலாந்தில் உள்ள ஹம்பர்சய்ட் விமான நிலையத்திலிருந்து பயணி ஒருவர் தனியார் இலகுரக விமானத்தை அமர்த்திக் கொண்டு நேற்று தான் செல்லவேண்டிய இடத்திற்குப் புறப்பட்டார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென நோய்வாய்ப்பட்ட அந்த விமானியால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியவில்லை.

பயணிக்கோ விமானம் ஓட்டுவதில் பெரிதாக அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினால்தான் அவரும் உயிர் பிழைக்க முடியும், விமானிக்கும் மருத்துவ உதவி அளிக்க முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.

விமானி சிரமப்பட்ட நிலையிலும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு ஏற்படுத்தி நிலைமையைக் கூறினார். விமானப் பயிற்சியாளர்கள் இருவர் அந்தப் பயணியுடன் தொடர்பு கொண்டனர். அவர்கள் விமானத்தை தரையிறக்க வழிமுறைகளை கூறினர். துணிச்சலுடன் பயமில்லாமல் அந்தப் பயணியும் விமானியின் இருக்கையில் அமர்ந்து அவர்கள் கூறியபடியே விமானத்தை இயக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அவர்களின் வழிகாட்டுதலில் விமானத்தை அந்தப் பயணி பத்திரமாகத் தரையிறக்கவும் செய்தார்.

மோசமான வெளிச்சம் வேறு அவருக்கு இடைஞ்சலாக இருந்தது என்றும், ஆயினும் அவர் திறமையாக செயல்பட்டார் என்றும் பயிற்சியாளர்களில் ஒருவரான ராய் முர்ரே தெரிவித்தார். பயணி பத்திரமாகத் தரையிறக்கியபோதும் விமானி இறந்துவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...