முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் கிளிநொச்சிக்கு சிங்களவர் ஒருவர் கணக்காளராக நியமனம்
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் கிளிநொச்சிக்கு சிங்களவர் ஒருவர் கணக்காளராக நியமனம்
கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனைக்கு நிரந்தரக் கணக்காளர் இல்லாத நிலையில் முகாமைத்துவ உதவியாளராக உள்ள ஒருவரே கணக்காளராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் நேற்று குருநாகல் மாவட்டதைச் சேர்ந்த ரனிக் கெடாவ என்ற சிங்களர் கணக்காளராக பிரதம செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பாக ஆளுநர் சந்திரசிறி மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நியமனம் தொடர்பாக முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த நியமனத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கல்வியில் அரசியல் கலப்பு மற்றும் பழிவாங்கல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்வம் கடும் விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.
(lanlasri)
0 Comments