தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எம்.சுபியான் ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அரபு நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்ராஹீம் நபி (ஸல்) அவர்களின் குடும்பம் இறைவனுக்காகச் செய்த தியாகத்தினை நினைவுகூறும் முகமாக ஹஜ்பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இதய பூர்வமான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மன நிறைவும் உவகையும் அடைகின்றேன் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான எஸ்.எம்.சுபியான் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இப்ராஹீம் நபி அவர்களுக்கூடாக இறைவன் எமக்கு எடுத்தியம்பிய தியாகத்தின் முன்மாதிரிகளையும், அதனூடாகக் கிடைக்கப்பெரும் சிறப்புகளையும் கருத்திற்கொண்டு இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் தியாகத்தினூடாக இன ஒற்றுமையை ஏற்படுத்துபவர்களாக இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திப்போமாக! எல்லாப் புகழும் இறைவனுக்கே.
                                                                                                                                                                                            kinniya.net