ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சுத்தமாக இருக்கிறதா?
ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சுத்தமாக இருக்கிறதா?
ஸ்கிரீனில் கறை எதாவது இருந்தால் அதை சுத்தம் செய்வதற்க்கு முன் போனை சுச் ஆப் செய்து பேட்டரியை கழட்டி வைத்து விட வேண்டும். பின்பு மைக்கிரோ பைபர் துணியை தண்ணீரில் நினைத்து ஸ்கிரீனை துடைக்க வேண்டும். பின்னர் ஈரம் படாத துணியின் பாகத்தை கொண்டு ஈரத்தன்மையை துடைக்க வேண்டும். ஈரத்தன்மை போனின் மைக் மற்றும் ஸ்பீக்கர் போன்ற பகுதிகளில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீட்டிற்க்கு பயன்படுத்தும் கிளீனர்கள் அல்லது வேறு எதாவது கெமிக்கல்களை வைத்து போனின் ஸ்கிரீனை சுத்தம் செய்ய கூடாது. அப்படி செய்தால் அந்த கெமிக்கல்கள் ஸ்கிரீனில் உள்ள கோட்டிங்கை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்கென பிரித்தியேகமாக தயாரிக்கப்படும் கிளீனர்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
போன்கள் ஈரமாகி விட்டால் உடனடியாக போனை சுச் ஆப் செய்து பேட்டரியை கழட்டி வைத்து விட வேண்டும். போனில் உள்ள ஈரத்தன்மை உலர ஏதுவான இடத்தில் இதை வைக்க வேண்டும்.
0 Comments