யாழில் அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
யாழில் அஞ்சல் திணைக்கள தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். அஞ்சல் தலைமையகத்தில் கடமையாற்றும் தற்காலிக ஊழியர்களே இன்று காலை 8.00 மணி முதல் மேற்படி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அஞ்சல் தினமான இன்று தம்மை நிரந்திரமாக்க கோரி இப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
(jaffnamuslim )
0 Comments