அமெரிக்காவைத் தாக்கிய அல்  கைதாவினருக்கு இலங்கையைத் தாக்குவது ஒரு சிறிய வேலை (அமைச்சர் குணரத்ன வீரகோண்)

இன்று 13-10-2013 எல்பிட்டிய குருந்து கஹ ஹதப்மாவில் வியாபாரிகள் சங்கம் மற்றும் சிங்கள ராவய ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தை கலைத்துவிட்டு உரையாற்றுபோது மீள் குடியேற்ற    அமைச்சர் குணரத்ன வீரகோண்  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்,



”அமெரிக்காவைத் தாக்கிய அல்  கைதாவினருக்கு இலங்கையைத் தாக்குவது ஒரு சிறிய வேலை. அப்படி நடப்பதை எமது ஜனாதிபதிக்கு கூட தடுக்க முடியாதெனவும்,இலங்கை ஒரு எறும்பு மாதிரியெனவும் சிங்கள ராவய இது போன்ற கூட்டம் நடத்துவதனால் எவ்வித பயனுமில்லையெனவும்” தெரிவித்திருக்கிறார்.



 இதன் போது அமைச்சருக்கும், பௌத்தமத குருமாருக்கும் இடையில் மிகவும் கடுமையயான வாக்குவாதம் ஏற்பட்டதோடு இதன் பின்னர் இந்தபக்கம் சிங்கள ராவய  உறுப்பினர்கள் வர வேண்டாமெனவும் அமைச்சர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
                                                                                                                                              
                                                                                                                                                                                                                                                                                                                                                                       தகவல்:www.jaffnamuslim.com