sireku


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட முன்னறிவிப்பிற்கு அமைவாக தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் ஆழமான தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதுடன் இது வரும் 12 மணித்தியாலங்களில் அதாவது நாளை (2ம் திகதி ) ஒரு புயலாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இப்புயலானது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை (02ம் திகதி) மாலையளவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே இச்சிரற்ற காலநிலை தொடர்பாக தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதுடன், இடியுடன் கூடிய மழை, கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...