டொக்டர் ஹில்மி மஹ்ரூப் அவர்களின் வாழ்த்து செய்தி
sireku
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.எம்.எஸ்.தொளபீக் அவர்களின் இவ் இமாலய வெற்றியானது தனி மனித முயற்சிக்கப்பாலான கூட்டு முயற்சியாகும்.
இவ் வரலாற்று சாதனை வெற்றிக்கு உதவிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர், நகர மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், கட்சிப்போராளிகள்,சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் நண்பர்கள் மற்றும் வெற்றிக்காக தமது வாக்குகளை வழங்கிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இவ் அமோக வெற்றியினை ஏனைய வெற்றிபெறாத வேட்பாளர்களுக்கு மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு மனதை புண்படுத்தும் விதத்தில் எந்த விடயங்களிலும் ஈடுபடாமல் அமைதியான முறையில் கொண்டாடுமாறு எமது ஆதரவாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
0 Comments