தம்பலகாமத்தில் இலங்கை இராணுவ/சிவில் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிகழ்வு .
sireku
இலங்கை தீவின் அனைத்து கிராம அலுவலர்
பிரிவுகளையும் உள்ளடக்கிய இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது .
12
இதில் உதவி பிரதேச செயலாளர் ஆர்.பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் B.U.B.L உடகெதர, கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிகேடியர் டபிள்யூ.என்.எஸ். ஏ.எம்.சுபாசிங்க, லெப்டினன்ட் சமரவீரா என பலரும் கலந்துகொண்டனர்.
இராணுவம் மற்றும் இராணுவ சிவில் சேவையில் சேர்ந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும்.
0 Comments