sireku
அல்லாஹவுக்கு பயந்த சுயனலம் இல்லாத ஒரு ஆளுமைமிக்க தலைவராக ஆர். அஸ்வாத்கான் உள்ளார் , இவர் தம்பலகாமம் பிரதேச சபையில் முள்ளிப்பொத்தானை வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரசில் (SLMC ) போட்டியிடுகின்றார் என தம்பலகாம  முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு தலைவரை சிறகு தொடர்பு கொண்டு முள்ளிப்பொத்தானை வட்டாரம் தொடர்பாக கேட்டபோது தெரிவித்தார் ,

அவர் மேலும் கூறுகையில் முள்ளிப்பொத்தானை வட்டாரமானது முள்ளிப்பொத்தானையின் இதயம் போன்றது முள்ளிப்பொத்தானையின் மத்தியில் அமைந்துள்ள இந்த வட்டாரமானது சிறந்த ஆளுமைமிக்க இஸ்லாமிய விழுமிய சிந்தனைகளை கொண்ட ஒழுக்கமான ஏனைய இனங்களுடன்  சேர்ந்து நடக்ககூடிய ஆளுமைமிக்க ஒரு தலைவரிடம் ஒப்படைத்து இப்பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களுக்கு முன்மாதிரியாக உருவாக்க வேண்டிய தேவை எமக்குள்ளது , 

இவ்வட்டாரத்தில் அபிவிருத்தி மட்டும் தேவையான ஒன்றாக கருதமுடியாது மாறாக மக்களின் பொதுவான பல பிரச்சினைகளும் உண்டு , முஸ்லிம் காங்கிரசின் முள்ளிப்பொத்தானை வட்டார 
வேற்பாளருக்கு இவ்வாறான பிரச்சினைகளை தீர்துவைப்பதற்கான ஆற்றலும் தேவையான பின்புல சக்தியும் உண்டு .

முள்ளிப்பொத்தானை வட்டாரத்தில் உள்ள மக்கள் அதிகமானோர் ஆர். அஸ்வத்கானை ஆதரிக்க முன்வந்துள்ளார்கள் எனவே முள்ளிப்பொத்தானை வட்டாரம் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார் .

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...