தம்பலகாம மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது NFGG.
சட்டத்தரணி ஜுல்பார் சவுர்தீன் அவர்களை சிறகு தொடர்பு கொண்ட போது ,தம்பலகாம மக்களை NFGG வெகுவாக கவர்துள்ளதாக சட்டத்தரணி ஜுல்பார் சவுர்தீன் குறிப்பிட்டார் தம்பலகாம மக்கள் கூடியளவு தெளிவினை அரசில் தொடர்பாக பெற்றுள்ளமையே இதற்கான காரணம் எனவும் குறிப்பிட்டார் .
கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதிக்கும்படியான சட்டங்களுக்கு தற்போது ஆட்சியில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஆதரவினை வழங்கிவிட்டு மக்கள் முன்பு போய் உரிமைகளை காக்க எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பது வேடிக்கையாக உள்ளது எனவும் குறியதுடன் இவர்களால் இனியும் எங்கள் மக்களை ஏமாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டார் .
மக்கள் இந்த உள்ளூராட்சி தேர்தலை ஒரு சிறிய தேர்தலாக பார்க்காமல் இது ஒவ்வொரு கட்சிக்குமான பலப்பரீட்சை என்பதை கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட 20 வது சீர்திருத்தம் , மாகாண சபை திருத்தச்சட்டம் , தற்போது கொண்டுவரப்பட்டுள்ள வட்டார முறையிலான உள்ளூராட்சி அதே போன்று எதிர் காலங்களில் ஏற்படுத்தப்படலாம் என அஞ்சும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்றவைகளயையும் சிந்தித்து எமது உரிமைகளை பாதுகாக்க NFGG இற்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள் எனவும் தம்பலகாம மக்களை கேட்டுக்கொண்டார்.

0 Comments