தான் கைது செய்யப்பட்டால் இந்நாட்டில் வாழும் முஸ்லீம்கள் வரலாற்றில் காணாத இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்று அந்தக் காக்கித் தீவிரவாதி சொல்லியிருக்கிறான்.

முஸ்லீம் அரசியல் வாதிகள்,புத்தி ஜீவிகள்,கல்வி மான்கள் என்று தம்மை சொல்லிக் கொள்கிறவர்கள் உருப்படியாக தாம் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நலவு செய்ய வேண்டிய தருணம் இது.

இந்த ஜந்துடைய பிதற்றல்களையும்,கக்குகின்ற விசத்தையும் ஆமோதிப்பது மட்டுமல்லாது இவனது நலன் மீது அதீதமான கரிசனை காட்டுகின்ற மனோ நிலை பெரும்பாலான பேரினஅரசியல் வாதிகளிடம் காணப்படுவது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்,ஆனால் சதாரன ஒரு சிங்கள பொது மகன் இந்த அட்டகாசங்களை கை கட்டிப்பார்த்து புண்ணகை செய்கின்ற அடி மட்ட உளப்பாங்கில் இல்லை என்பதை மறுப்பதற்கில்லை.

நாட்டில் ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியும்,பிரதமரும் வெளி நாட்டு பயணங்கள் மீது அதிக ஆர்வம் காட்டுவது நாட்டின் உச்ச அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்புக் கூறலிலிருந்து விலகிச் செல்வதையே காட்டுகின்றது.

எனவே வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்ற ஞானமே இல்லாத அந்த சாரவினால் முஸ்லீம்களின் இருப்பு,கௌரவம்,சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடிய துரதிர்ஸ்ட நிலையிலிருந்து எம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்விடயம் மீது கரிசனை எடுக்க வேண்டிய மிக முக்கியமானவர்கள் சுமூகமாக பிரச்சனையைத்தீர்த்து வைக்க முயற்சிக்காமல் இருப்பது ஒரு புறமிருக்க இவர்களுடைய ஆசீர்வாதத்துடன்தான் இவ்வாறான முட்டாள்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் சாதாரன பாமரன் மனதில் கூட உருவாகியிருப்பது ரொம்பவும் இயல்பானதே.

ஒரு சமூகம் தொடர்ச்சியாக அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டு அதை அந்த சமூகமும் அப்படியே ஏற்றுக்கொண்டதாக வரலாற்றில் எந்த சான்றுகளும் இல்லை.

உலகிற்கு நாகரீகத்தைக் கற்றுத்தந்தவாகள் இஸ்லாமியர்கள்,இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் கொச்சைப்படுத்த நினைப்பவர்கள் கடைசியில் அழிந்து முகவரி இல்லாமல் போவது உலகம் அறிந்த உன்மை.

மலையைப்பார்த்து நாய் குறைப்பதால் மலைக்கு எந்த நஸ்டமும் ஏற்படுவதில்லை,சிறிது நேரத்தில் அந்த நாயே தன்னுடைய இயலாமையை புரிந்து கொள்ளும்,அந்த நாள் தூரத்தில் இல்லை,நாம் செய்ய வேண்டியது மலையைப் போல உறுதியாக இருப்பதுதான்.

ஜெஸீர் சுபைர்