மீன்பிடிக்க சென்ற தம்பலகாம இளைஞனைக் காணவில்லை.
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தெலியன் களப்பு பகுதியில் மீன் பிடிக்க சென்ற 19 வயது இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞன் இன்று (22) அதிகாலை 3.00மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
காணாமல் போயுள்ள இளைஞனை தேடும் நடவடிக்கையில் கிராமமக்களும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
இவர் தம்பலகாமம் தாயிப் நகர் பகுதியைச்சேர்ந்த ஹலால்தீன் முகம்மது பரீட் (19 வயது) எனவும் தெரியவந்துள்ளது
0 Comments