"தம்பலகாமத்தில்- பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பாராட்டு விழா"
sireku
கட்டார் வாழ் தம்பலகாமம் சமூக அமைப்பினால் (TCQ) திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான பாராட்டு விழாவும் ஒன்றுகூடலும் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 18 ஆம் திகதி செப்டம்பர் 2016, காலை 8. 30 மணிக்கு முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
இந்த பாராட்டு விழாவுக்கு தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டம்பெற்ற (உள்வாரி மற்றும் வெளிவாரி) அதேபோன்று தற்போது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை மேற்கொண்டிருக்கும் (உள்வாரி மட்டும்) அனைத்து முஸ்லிம் மாணவர்களையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கட்டார் வாழ் தம்பலகாம சமூக அமைப்பு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளயிருப்போருக்கான அழைப்பிதல்கள் தனித்தனியாக காலக்கிரமத்தில் அனுப்பிவைக்கப்படும்.
இந்த பாராட்டு விழாவுக்கு பிரதம அதிதியாக தம்பலகாம பிரதேச செயலாளர் திருமதி ஜே. சிரிபத்தியும் விஷேட அதிதிகளாக பாடசாலை அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிபர்கள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
வெளிநாடுகளில் வதியும் தம்பலகாம பிரதேச மக்களினால் இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கெளரவிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்த ஏற்பாட்டினை செய்த கட்டார் தம்பலகாம சமூக அமைப்பு, (Thampalaham community in Qatar) நாட்டிலும் குறிப்பாக தம்பலகாமத்தில் பல்வேறு சமூகப்பணிகளை அண்மைக்காலமாக திறம்பட செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்
செயட்குழு
TCQ
Doha
Qatar
--
Mohammed S.M.Rinoz

0 Comments