முள்ளிப்பொத்தானையில் இரு முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளில் திருட்டு
sireku
திருகோணமலை -முள்ளிப்பொத்தானை 96 ம் கட்டைபகுதியில் இரு முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளை உடைத்து பொருட்களை களவாடியுள்ளனர்.
96 ம் கட்டைபகுதியில் உள்ள பொது சந்தைக்கு முன்னால் உள்ள புடவைக்கடையும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடையும் உடைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கடையை மூடி விட்டு சென்று இன்று புதன்கிழமை காலை கடையை திறந்த போது கடைகள் இரண்டும் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
தம்பலகாம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடை உடைப்பு தொடர்பாக எவரும் கைது செய்யப்பட வில்லை.
அண்மைக்காலமாக இப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கடந்த மாதம் திருடர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments