sireku


2015 ஆம் ஆண்டு தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருள) எனும் கண்காட்சி நடத்தப்படமாட்டாது என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த கண்காட்சி, சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரையும் நடத்தப்பட்டது.

2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 20010ஆம் ஆண்டு கண்டியிலும் 2011ஆம் ஆண்டு மொனராகலையிலும் 2012ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும் 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலும் 2014ஆம் ஆண்டு குளியாப்பிட்டியவிலும் நடத்தப்பட்டது.

2015ஆம் ஆண்டு மாத்தறையில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...