sireku



தேர்தலுக்கு முன்னான வரவு – செலவு கணக்கில் அதிரடியான அறிவிப்புகள் வெளியாகும் என அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவித்திருந்ததற்கமைய அரச ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் மேலதிக கொடுப்பனவுகளையும் சேர்த்து ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது ரூ.25,000 வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.
சமுர்த்தி, மஹபொல திட்டங்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ள ஜனாதிபபதி குழந்தைகளின் பால்மா முதல் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கும் விலைக்கழிவுட்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி பத்தாவது தடவையாக இம்முறையும் வரவு செலவுத்திட்டத்தைத் தாக்கல் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(sonakar)

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...