sireku

வில்பத்து வனப்பகுதிக்கு சொந்தமான காணியில் முஸ்லிம் மீள்குடியேற்றங்கள் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் பசில்  ராஜபக்ஷ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட
அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஜானதிக பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரெக்க விஜித தேரர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இன்று கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த தேரர் :
ரிஷாட் பதியுதீன் வில்பத்து வனப்பகுதிக்கு சொந்தமான காணியில் முஸ்லிம் மீள்குடியேற்றங்களை அமைக்க அனுமதி கொடுத்தது யார்? வேறு யாரும் அல்ல  பசில் ராஜபக்ஷ தான். இது ராஜபக்ஷ குடும்பத்தின் பெற்றோரின் சொத்துகள் அல்ல. அதனால் நான் பொறுப்புடன் தெரிவிக்கிறேன் ரிஷாட் பதியுதீன் இந்த நடவடிக்கைகள் எல்லாம் மேற்க்கொள்வது, பசில்  ராஜபக்ஷவின் அனுமதியுடன் தான்.
இந்த நாட்டில் தீவிரவாத கடும்போக்கு இயக்கங்களுடன் அரசும், ஊடகங்களும் இணைந்திருக்கின்றது. அவர்களுக்கு முடியும் எங்களை இல்லாமல் ஒழிக்க. நாங்கள் அதற்கு தயார். என்றாலும் எங்களை இல்லாமல் ஒழிப்பதில் பயனில்லை. ஏன் என்றால் எங்களைவிட வேகமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பலரை நாம் தயார் செய்திருக்கிறோம். அவர்கள் யார் என விரைவில் தெரியவரும்.
இந்த மலரும் புத்தாண்டில் இந்த நாடு முழுவது பிரிவினை வாதத்தினை கொண்டுசெல்லும் முஸ்லிம் கடும்போக்கு அமைப்புக்கள் மற்றும் முஸ்லிம் கடும்போக்கு அமைப்புக்களுக்கு பணம் வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இறுதி ஆண்டாக அமைய அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.-டெய்லி சிலோன்