sireku

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அறிக்கைக்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவியளித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறு பேரைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு குழுவொன்று நவனீதம்பிள்ளை அறிக்கை தயாரிப்பிற்கு பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே, தாருஸ்மான் குழுவின் யாஸ்மீன் சூகா, பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன், முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி கோர்டன் வைஸ், சார்ள்ஸ் பெட்ரீ ஆகியோர் இவ்வாறு ஆதரவளித்துள்ளனர்.

இந்தக் குழுவினர் நவனீதம்பிள்ளைக்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளனர்.

போரின் போது 40,000 முதல் 147,000 வரையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு போதியளவான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

http://news.lankasri.com/

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...